நீலகிரி,வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்துவாங்கி வரும் நிலையில் அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
கோவை குற்றாலம் மற்றும் வால்பாறை பகுதிகளில் கடந்த இரு நாட்களாக வெளுத்து வாங்கும் மழையால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் வால்பாறையிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
ஏற்கனவே பெய்த கனமழையின் போது பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடும் அதிகாரத்தை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு கொடுத்திருந்த நிலையில் மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.