Site icon ITamilTv

கொரோனாவை விட ஆபத்தான நிபா வைரஸ்.. எப்படி தடுப்பது? முழு விவரம்!!

Spread the love

உலக சுகாதார அமைப்பு (World Health Organisation) நிபா வைரஸின் இறப்பு விகிதம் 40 முதல் 75 சதவிகிதம் வரை இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

கேரளாவில் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில், இதுவரை, நிபா வைரஸால் 2 பேர் இறந்துள்ளனர். இந்நிலையில், நிபா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அம்மாநில அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இதுவரை 6 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது.

நிபா வைரஸ் என்றால் என்ன? அதன் அறிகுறிகள், சிகிச்சை மற்றும் எப்படி தடுப்பது உள்ளிட்டவற்றை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நிபா வைரஸ் :

1998-ம் ஆண்டு மலேசிய கிராமத்தில் முதன்முதலில் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் இதற்கு ‘நிபா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. நிபா வைரஸ் ஒரு ஜூனோடிக் வைரஸ் ஆகும். அதாவது இது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் ஒருவகை தொற்று நோய். இது மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கும் பரவும். இந்த வைரஸ் முதன் முதலில் பழம் தின்னும் வௌவால்களில் இருந்து பன்றிகளுக்கும், பன்றிகளிலிருந்து மனிதர்களுக்கும் பரவியது.

நிபா வைரஸின் அறிகுறிகள் :

இதற்கான சிகிச்சை முறை :

நிபா வைரஸ் தொற்றுக்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பாதிக்கப்பட்ட நபர்கள் பொதுவாக வழக்கமான மருத்துவ பராமரிப்பு மற்றும் வைரஸ் பரவாமல் தடுக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், ரிபாவிரின் மற்றும் ஃபாவிபிராவிர் போன்ற சில பரிசோதனை மருந்துகள் பலன் அளிப்பதாக உள்ளது என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

நோய் பரவல் தடுப்பு நடவடிக்கை :


Spread the love
Exit mobile version