தமிழகத்தில் புயல் சின்னமா? – வானிலை ஆய்வு மையம் சொன்ன விளக்கம்

வங்கக்கடலில் அந்தமான் அருகே இன்று காலை காற்றழுத்தத்தாழ்வு பகுதி உருவாகியிருப்பதால் இது புயலாக மாறுமா என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.

வங்க கடலில் அந்தமான் அருகே இன்று காலை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி 11-ம் தேதி வட தமிழக கரையை நெருங்கும் எனவும், இது புயலாக மாற வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாக புது‌ச்சே‌ரி‌ – கடலூர் இடையே கேரளா செல்லும் என கூறப்பட்டுள்ளது.

Total
0
Shares
Related Posts