அனைத்து சர்வதேச பயணிகளுக்கும் புதிய உத்தரவு – மத்திய அரசு

no-more-restrictions-for-passengers-!!-7-days-home-isolatio
no-more-restrictions-for-passengers-!!-7-days-home-isolatio

அனைத்து சர்வதேச பயணிகளுக்கும் வீட்டு தனிமை கட்டாயம் என மத்திய அரசு புதிய உத்தரவு பிறப்பித்து உள்ளது. மேலும் இதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு அதிவேகத்தில் பரவி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை திடீரென உயர்ந்து வருகிறது. இதன்படி, 1 லட்சத்திற்கும் கூடுதலான எண்ணிக்கை பதிவாகி உள்ளது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன.

தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் பல நாடுகளில் பரவி பாதிப்புக்களை ஏற்படுத்தி வந்த நிலையில் இந்தியாவிலும் பரவி வருகிறது. இதனால், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளது.
இதன்படி, அனைத்து சர்வதேச பயணிகளுக்கும் வீட்டு தனிமை கட்டாயம் என மத்திய அரசு புதிய உத்தரவு ஒன்றை நேற்று பிறப்பித்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது.

no-more-restrictions-for-passengers-!!-7-days-home-isolatio
no more restrictions for passengers 7 days home isolatio

இதேபோன்று, இந்தியாவுக்கு வருகை தரும் ஆபத்து நிலையிலான நாடுகள் பற்றிய பட்டியலை அரசு வெளியிட்டு உள்ளது. இந்த நாடுகளை சேர்ந்த பயணிகள், நாட்டுக்கு வந்த பின்னர் மேற்கொள்ளும் பரிசோதனை உள்பட கூடுதல் நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் வருகிற 11ம் தேதி முதல் அடுத்த உத்தரவு வரும்வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Total
0
Shares
Related Posts