அறப்போர் இயக்கம் குற்றசாட்டியிருந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட நீர்நிலை பகுதியிலிருந்து நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ளது என்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா விளக்கம் அளித்துள்ளார்.
அறப்போர் இயக்கம் குற்றசாட்டு :
அண்மையில் அறப்போர் இயக்கத்தின் டிசம்பர் 8 கள ஆய்வுக்கு பதில் அளித்துள்ள தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அவர்கள் நீர்நிலைகளில் எந்த எண்ணெய் படலமும் கலக்கவில்லை என்று சொல்லி இருக்கிறார்.
அறப்போர் ஆய்வு செய்த இடம் மற்றும் வீடியோ : https://x.com/Arappor/status/1733071025439637929?s=20 எடுத்த இடம் படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது கொசஸ்தலை ஆறு. இந்த வீடியோவில் தண்ணீரில் எண்ணெய் படலம் மிதப்பது மிகவும் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடலில் தற்பொழுது அகற்றப்பட்டு வரும் https://x.com/Arappor/status/1734573752460218798?s=20 எண்ணெய் படலம் கொசஸ்தலை ஆறு வழியாகவும் சென்றுள்ளது. நீர்நிலை பகுதியிலிருந்து நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள தலைமை செயலாளர் அந்த மாதிரிகளின் சோதனை முடிவை மக்கள் முன் வெளியிட வேண்டும்.
மேலும் கடலில் கலந்துள்ள எண்ணெய் படலத்தை சிறப்பு நவீன இயந்திரங்கள் கொண்டு அகற்றுவதாக அறிக்கை வெளியிட்டுள்ள சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் அரசு கூடுதல் தலைமை செயலாளர் அவர்கள் அந்த நவீன எண்ணெய் அகற்றும் பணியை வீடியோ எடுத்து வெளியிட்டு மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். Mug வைத்து கடலில் எண்ணெய் அகற்றுகிறார்கள் என்று கேலி பேசும் அனைவருக்கும் இது தகுந்த பதிலடியாக இருக்கும் என்பதால் உடனடியாக இதை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
இந்த எண்ணெய் கசிவுக்கு காரணமான Chennai Petroleum Corporation Limited (CPCL) refinery நிர்வாகம் மீது உடனடி விசாரணை நடத்தி அரசு மற்றும் பொது மக்களுக்கு இந்த எண்ணெய் கசிவால் ஏற்பட்ட நஷ்டத்தை அவர்களிடத்தில் இருந்து வசூலிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டு இருந்தது.
அறப்போர் இயக்கம் குற்றசாட்டியிருந்த நிலையில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
அதில், நாசரேத்பேட் யமுனா நகர் பகுதியில் 11.12.2023 இரவு முதல் நெய்வேலியிலிருந்து ராட்சத மிதக்கும் மின்மோட்டார் கொண்டு ஒரு நிமிடத்திற்கு 4 இலட்சம் லிட்டர் மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. எனவே, மழைநீர் வெளியேற்றும் பணியானது 13.12.2023 அன்று நிறைவடையும்.
இப்பகுதியில் படகு பயன்படுத்தப்பட்டு அடிப்படை தேவை பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் நாசரத்பேட் ஊராட்சியில் மழைநீர் வடிந்த இடங்களில் அனைத்து தெருக்களையும் சுத்தம் செய்து நாள்தோறும் பிளிச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டும் மற்றும் பொது சுகாதார துறையின் மூலம் தினந்தோறும் மருத்து முகாம் நடத்தப்பட்டும் வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.