ITamilTv

தமிழகத்தில் யாருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!!

Spread the love

தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை என்றும், நிபா வைரஸ் குறித்து பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் கூடலூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை என்பதால் பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

வைரஸ் பரவலை தடுக்க கேரள மாநிலத்தின் அண்டை மாவட்டங்களாக உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரளாவின் எல்லையோர பகுதிகளில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகளை கடந்து செல்லும் வாகனங்களை மருத்துவ அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

மேலும், காய்ச்சல் அறிகுறியுடன் யாரவது இருக்கிறார்களா என்பது குறித்து பரிசோதனை நடத்தி வருகின்றனர். காய்ச்சல் பாதிப்பு இருப்போருக்கு உடனடியாக சிகிச்சை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் 19 பகுதிகளில் மாவட்ட அரசு மருத்துவமனைகள் இயங்கி வரும் நிலையில், மாநில அளவில் மேலும் 6 புதிய மாவட்ட மருத்துவமனைகள் அமைக்கப்பட உள்ளன.

இதற்காக ரூ.1100 கோடி மதிப்பில் கட்டிடப்பணிகள் நடந்து வருகின்றன என்றும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


Spread the love
Exit mobile version