தமிழ்நாட்டில் யாருக்கும் M-Pox வைரஸ் (குரங்கு அம்மை) தொற்று பாதிப்பு இல்லை என பொதுசுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
Mpox (குரங்கு அம்மை) தொற்று பாதிப்பு ஆப்ரிக்க கண்டத்திற்கு வெளியே முதல் முறையாக கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த தொற்று பாதிப்பு ஸ்வீடன் நாட்டில் ஒருவருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்திருந்த நிலையில் பல நாடுகளிலும் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தொடர்ந்து தகவல் வெளியாகி வருகிறது.
Also Read : வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் SSLV-D3 ராக்கெட்..!!
இந்நிலையில் தமிழ்நாட்டில் யாருக்கும் M-Pox வைரஸ் (குரங்கு அம்மை) தொற்று பாதிப்பு இல்லை என பொதுசுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
காங்கோ, மத்திய ஆப்பிரிக்கா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நாடுகளில் M-Pox (குரங்கு அம்மை) பரவியுள்ள நிலையில், இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய அரசு வெளியிட்டுள்ளது