பார்சல் சாப்பாட்டில் ஆர்டர் செய்தபடி ஊறுகாய் இல்லாததால் நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில் தற்போது ₹35,025 அபராதம் விதிப்பு
விழுப்புரத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆரோக்கியசாமி என்பவர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பால முருகன் ஹோட்டலில் ஊறுகாயுடன் 25 சாப்பாடு ஆர்டர் செய்து பெற்றுள்ளார்.
இந்நிலையில் ஆர்டர் செய்திருந்த பார்சலில் ஊறுகாய் இல்லாததால் ஹோட்டலில் சென்று அதற்கான பணத்தை திரும்ப கேட்கையில் நிர்வாகம் பணம் தர மறுத்துள்ளது .
இதையடுத்து ஆரோக்கியசாமி அந்த ஹோட்டல் மீது நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். நீண்ட காலமாக இந்த வழக்கு சென்ற் நிலையில் தற்போது வாடிக்கையாளரின் மன உளைச்சலுக்கு ₹30,000, வழக்கு செலவுக்கு ₹5000, ஊறுகாய் இழப்பீடாக ₹25 வழங்க நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது .
பார்சல் சாப்பாட்டுக்கு ஊறுகாய் தராத உணவகத்திற்கு, ஊறுகாய் விலையுடன் சேர்த்து ₹35,025 அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் தற்போது அப்பகுதியில் சற்று பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.