கடும் நிதி பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் இலங்கையில் அத்தியாவச பொருள்களின் விலை மிகவும் உச்சத்தை தொட்டு உள்ளது .இந்த நிலையில் இலங்கைக்கு புதிய நிதி உதவி வழங்கும் திட்டம் எதுவும் இல்லை என உலக வாங்கி திட்ட்ட வட்டமாக தெரிவித்துள்ளது.
இதனால் அந்நியசெலாவணி கையிருப்பு இல்லாத்தால் இலங்கை அரசு திணறி வருகிறது .இதனை தொடர்ந்து இந்தியா உலக வங்கியிடம் இலங்கைக்காக நிதியுதவி வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது .
இந்த நிலையில் இலங்கைக்கு புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவி ஏற்றார்.நிதி நிலைமை குடித்து விளக்கமளித்த அவர் ,இலங்கை பொருளாதாரம் திவாலான நிலையில் 52,500 கோடி ரூபாய் தவணை செலுத்த முடியாமல் நிலுவையில் உள்ளது.
இதனால் உலக வங்கி நிதி உதவி வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது . இது குறித்து விளக்கம் அளித்துள்ள உலக வங்கி நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சியை மீட்டெடுப்பதற்கான பொருத்தமான கொள்கைகளை வகுக்க ஆலோசனை வழங்கப்படும் எனவும், அதே சமயத்தில் இலங்கைக்கு புதிய நிதி உதவி வழங்க எந்த திட்டமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.