2025 ஆண்டின் (IRBM) முதல் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக வடகொரியா நடத்தி முடித்துள்ள நிலையில் இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
உலகில் இருக்கும் பல நாடுகள் தங்களுக்கென தனி மரபுகளை கொண்டு அந்நாட்டு மக்களை வழிநடத்தி வரும் நிலையில் வடகொரியா நாடு சற்று தனித்துவமான பல கடுமையான மரபுகளை கொண்டு அதனை பின்பற்றி வருகிறது.
இதன்காரணமாக வடகொரியாவின் நடவடிக்கைகள் குறித்து பலரும் கவலையும் கண்டனத்தையும் தெரிவித்து வரும் நிலையில் நீங்கள் என்ன சொன்னாலும் நான் செய்வதை தான் செய்வேன் என வடகொரியா தொடர் ஏவுகணை சோதனைகளை செய்து வருகிறது.
இந்நிலையில் புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணையை (IRBM) வெற்றிகரமாக சோதித்து வடகொரியா மீண்டும் உலக நாடுகளை அச்சுறுத்தியுள்ளது.
ஒலியை விட 12 மடங்கு வேகத்தில் சென்று சுமார் 1,500 கி.மீ தூரம் வரையிலான இலக்கை இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை துல்லியமாக தாக்கியுள்ளது.
அமெரிக்கா மற்றும் தென் கொரிய நாடுகள் இந்த சோதனைக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, ரஷ்யாவுடன் வடகொரியாவின் வளர்ந்து வரும் உறவுகள் குறித்தும் கவலைகளை எழுப்பியுள்ளன