தொடர் மழை- தமிழகத்தில் எந்தந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

Northeast-Monsoon-heavy-rain-schools-holiday
Northeast Monsoon heavy rain schools holiday
Spread the love

கனமழை காரணமாக இன்று சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இலங்கை கடலோரப் பகுதி மற்றும் அதனையொட்டிய தென் தமிழக கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடித்து வருகிறது.

இதனால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் தீபாவளி வரை 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Northeast-Monsoon-heavy-rain-schools-holiday
Northeast Monsoon heavy rain schools holiday

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து வருகின்றனர்.

அதன்படி பெரம்பலூர், திருவண்ணாமலை, அரியலூர், விழுப்புரம். கடலூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் சென்னைய, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, காஞ்சிபுரம், கொடைக்கானல் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


Spread the love
Related Posts