சென்னையில் உள்ள நியாயவிலைக் கடைகளில் UPI மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம் தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற செயலிகளை தற்போது அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்கள் ஆதரிக்கத் துவங்கியுள்ளனர்.
அந்த வகையில், கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி இதன்படி தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் கூகுள் பே, பேடிஎம் (G-Pay, Paytm) போன்ற யுபிஐ வசதி மூலம் பணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்து இருந்தார்.
இந்த சூழலில் தற்போது இந்த சேவை சென்னையில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. சென்னை மற்றும் அம்பத்தூர், ஆவடி புறநகர் பகுதிகளில் உள்ளிட்ட மொத்தமாக 1700 க்கும் மேற்பட்ட ரேசன் கடைகள் உள்ள நிலையில், 1500 க்கும் மேற்பட்ட கடைகளில் இத்திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் விரைவில் இந்த திட்டம் அமல்படுத்தப்படவுள்ளதாக தமிழ்நாடு கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் இனி தங்கள் கைகளில் பணமில்லை என்றாலும், அதனை மொபைல் UPI மூலம் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.