உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நியூசிலாந்து – தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை..!!

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் நியூசிலாந்து – தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளது .

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை 31 லீக் போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில் மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் 32 வது லீக் போட்டியில் நியூசிலாந்து – தென்ஆப்பிரிக்கா அணிகள் மல்லுக்கட்ட உள்ளது.

நடப்பு உலககோப்பை தொடரில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள நியூசிலாந்து அணி 4 ல் வெற்றியும் 2ல் தோல்வியடைந்தும் புள்ளிப் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.

அதேபோல் தென்ஆப்பிரிக்கா அணி இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் 5 ல் வெற்றியும் 1ல் தோல்வியடைந்தும் புள்ளிப் பட்டியலில் 2 வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் இன்று பிற்பகல் நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

Total
0
Shares
Related Posts