“எங்கிருந்தாலும் வாழ்க”… சிரித்தபடியே பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம்..?

மதுரை விமான நிலையத்தில் இன்று ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தபோது ஒரு கேள்விக்கு எங்கிருந்தாலும் வாழ்க. என சிரித்தபடியே தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று அதிமுக முன்னாள் எம்.பி மைத்ரேயன் பாஜக தேசிய பொதுச்செயலாளர்கள் அருண் சிங், சிடி ரவி ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எங்கிருந்தாலும் வாழ்க என கிண்டலாக சிரித்தபடி தெரிவித்தார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் மேலும் பேசுகையில், தமிழ்நாடு முழுவதும் கூடிய விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன்.

ஏற்கனவே, மேகதாது பற்றி விரிவான அறிக்கை கொடுத்துள்ளேன். தமிழ்நாடு அரசின் அனுமதி, அங்கீகாரம் இல்லாமல் மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்ட முடியாது.

இதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளது என்றார். பேட்டியின் போது முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Total
0
Shares
Related Posts