October 23 Gold Rate : இன்று தங்கம் விலை ஒரு சவரன் ரூ58,720க்கு விறபனை செய்யப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்கத்தின் விலை ஏற்றம், தங்கத்தில் முதலீடு செய்யும் அனைவரையும் பிரமிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது.
பொதுவாக எந்த சொத்தும் விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டது தான். அதில் தங்கமும் அடக்கம்.
மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை பாரம்பரியமாக விரும்புகிறார்கள், ஏனெனில் இது பாதுகாப்பான முதலீடு என்பதனால்.
அதுமட்டுமல்லாமல், காலப்போக்கில் இது மற்ற சொத்து வகுப்புகளுடன் ஒப்பிடும்போது நிலையான வருமானத்தை வழங்குகிறது.
மேலும், அன்றைய காலகட்டத்தில் தங்கம் உள்ள விலையில் விற்க எளிதானது.
இதையும் படிங்க : முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை..!!
நேற்று (22.10.24) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 20 அதிகரித்து ரூ.7,300 க்கும், சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து சவரன் 58,400க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று (23.10.24) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.7,340க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.58,720க்கும் விற்பனை விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று (22.10.24) 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ரூ.6,025க்கும், ஒரு சவரன் ரூ. 48,200க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று (23.10.24) 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.6,055க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.48,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.110க்கும், ஒரு கிலோ ரூ.1,10,000க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.112க்கும், ஒரு கிலோ ரூ.1,12,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது (October 23 Gold Rate).