old photograph history : ஸ்டார்டிங் வேறமாறி இருக்கும்.. வெளில போய்டாதீங்க.. கன்டென்டை முழுசா படிச்சு பாருங்க பிரண்ட்ஸ்..
திருச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, அடிக்கடி உதயநிதி செங்கல்லை தூக்கி கொண்டு வருகிறார் என்று கலாய்க்க,
அதனைத் தொடர்ந்து காஞ்சிபுரத்தில் திமுக வேட்பாளர் செல்வதை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட உதயநிதி..,
திருச்சியில் பேசியிருக்கும் எடப்பாடி அவர்கள்.. உதயநிதி கல்லை காட்டுகிறார் என்று பேசியுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு மதுரைக்கு வந்த மோடி AIIMS மருத்துவனை கட்ட ஒரே ஒரு கல்லை அடிக்கல் நாட்டி விட்டு சென்றார்.
நான் காட்டும் இந்த கல் தான் பிரதமர் மோடி அவர்கள் AIIMS மருத்துவமனை கட்ட அடிக்கல்லாக நட்டு விட்டுச் சென்றது.
அதையும் நான் எடுத்து வந்துவிட்டேன். இனி எப்போது மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்குகிறதோ அப்போது தான் இந்த கல்லை நான் திருப்பி தருவேன் என்று கூறிய அவர்,
நானாவது கல்லை தான் காட்டுகிறேன்.. அவர் என்ன பண்ணுனார் பாருங்க என்று கூறியபடி.. எங்க அந்த போட்டோவை குடுங்க என்று வாங்கி காட்டி.. இதுல பாருங்க இந்த போட்டோ மோடி அவர்கள் 2019ஆம் ஆண்டு மதுரைக்கு வந்தபோது அவருடன் சேர்ந்து எடப்பாடி பழனிசாமி எடுத்துக்கொண்ட போட்டோ..
இதுல அவர் என்ன செய்கிறார் பாருங்க.. நானாவது கல்ல தான் காட்றேன். ஆனா, அவரு பல்ல காட்றாரு.. என்று பதிலடி கொடுத்தார்.
இப்படியாக தற்போதைய சூழலில், தேர்தல் பிரச்சாரங்கள் கலகலப்பாகவும், விறுவிறுப்பாகவும் போய்க்கொண்டிருக்கிறது..
டைட்டில் வேற மாறி போட்டுட்டு..இப்போ எதுக்குங்க இதெல்லாம் சொல்றிங்கனு தான கேக்குறிக.. இருக்கு சம்மந்தம் இருக்கு.. என்னனு பாக்கலாம் வாங்க.. old photograph history..
தற்போதைய கால கட்டத்துல வளர்ந்து வரும் தொழில் நுட்ப வளர்ச்சியால நாம நம்மள எப்படி வேண்டுமானாலும் புகைப்படம் எடுத்துக்கிட்டு அத சோசியல் மீடியாக்கள்ல போட்டு லைக்ஸ் வாங்குறோம்..
செல்பி எடுக்காம அந்த நாளே முழுமையடையாது அப்டீன்ற நிலைக்கு வந்துட்டோம். அதுமட்டுமில்லாம வீட்ல எந்த பங்க்ஷன்னாலும் உடனே போட்டோ ஷூட் பண்றதுக்கு தவறுறது இல்ல..
அந்த அளவுக்கு AI தொழில்நுட்பம் வரைக்கும் வளர்ந்துருச்சு.. அதுனால தான் கடந்த 2019ஆம் ஆண்டு மோடியோட எடப்பாடியார் சிரிச்ச முகத்தோட எடுத்துக்கிட்ட போட்டோவ இப்பவும் அப்படியே காமிக்க முடிஞ்சது.
ஆனா, கடந்த நூற்றாண்டை சேர்ந்த புகைப்படங்கள பாத்தா அதுல யாருமே சிரிச்சுருக்க மாட்டாங்க.. அத கவனிச்சு இருக்கீங்களா?
பாக்கலைன்னா உங்க வீட்ல இருக்குற பழைய கால கொள்ளு தாத்தா, கொள்ளு பாட்டி புகைப்படங்களை எல்லாம் தூசு தட்டி எடுத்து பாருங்க..
அதுல யாருமே சிரிச்சு போஸ் கொடுத்திருக்க மாட்டாங்க.. ஏன்னா, அந்த காலத்துல ஒரு புகைப்படம் எடுக்கணும் அப்டீனா நீண்ட நேரம் தேவைப்பட்டுச்சு. ஒரு புகைப்படம் எடுக்க பல நிமிடங்கள் தேவைப்பட்டுச்சு.
அந்த வகையான போட்டோ ஷூட் “டாகுரோடைப்ஸ்” என அழைக்கப்பட்டது. இதனால், ஒரு புகைப்படம் எடுப்பதற்கே பல நிமிடங்கள் தேவைப்பட்டதால், அவ்வளவு நேரமும் ஒருவரால் சிரித்துக்கொண்டே போஸ் கொடுக்க முடியாது..
அதுமட்டுமல்லாமல், அது குடும்ப போட்டோவாக இருந்தால் எல்லார் முன்னிலையிலும் நீண்ட நேரம் சிரித்துக்கொண்டே இருப்பது ஒருவிதமான சங்கடத்தை ஏற்படுத்தும்.
எனவே, தான் அந்த காலத்தில் சிரிக்காமல் அமைதியாக நீண்ட நேரம் போட்டோவுக்கு போஸ் கொடுத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். இதுதாங்க காரணம்..
சரி, இத படிச்சவங்க.. உங்க வீட்ல யாராவது அந்த கால போட்டோக்கள்ல சிரிச்சு போஸ் குடுத்துருக்காங்களானு தேடிப் பாருங்க. அப்டி இருந்தா கமெண்ட்ல ஷேர் பண்ணுங்க..