இந்தியாவில் வேகமெடுக்கும் ஒமைக்ரான் – தினசரி பாதிப்பு மேலும் அதிகரிப்பு!

Tamil-News-Omicron-case-tally-stands
Tamil News Omicron case tally stands

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,270 ஆக அதிகரித்து உள்ளதாக மத்திய சுகாதார துறை தெரிவித்துள்ளது.  இது வரை 23 மாநிலங்களில் ஒமைக்ரான் பரவி இருப்பதாக அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.

தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரசான ‘ஒமைக்ரான்’ அடுத்த சில நாட்களில் 100க்கும் அதிகமான நாடுகளுக்கு பரவியது. அந்த வகையில் இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்றால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தியாவில் நேற்று காலை நிலவரப்படி நாடு முழுவதும் 961 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்த நிலையில் இன்று மேலும் அதிகரித்துள்ளது. அதன் படி ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 1,270 ஆக அதிகரித்து உள்ளதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய 2 மாநிலங்களிலும் ஒமைக்ரான் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு எகிறத் தொடங்கியுள்ளது. மகாராஷ்டிரத்தில் 450 பேரும், டெல்லியில் 320 பேரும், கேரளாவில் 109 பேரும், குஜராத்தில் 97, ராஜஸ்தானில் 69, தெலுங்கானாவில் 62 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு காணப்படுகிறது.

Omicron-case-tally-stands
Omicron case tally stands

தமிழகத்தில் 46 பேர் ஒமைக்ரான் பாதிப்புடன் உள்ளனர். கர்நாடகாவில் 34 பேரும், ஆந்திராவில் 16 பேரும், அரியானாவில் 12 பேரும் ஒமைக்ரான் தொற்றுக்கு  சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒமைக்ரானை கட்டுப்படுத்த இந்த மாநிலங்களில் கட்டுப்பாடு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஒமைக்ரான் பாதித்த 1,270 பேரில் 374 பேர் குணமடைந்து விட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் வீடு திரும்பியுள்ளனர்.

Total
0
Shares
Related Posts