ஒமைக்ரான் எதிரொலி: தமிழக பள்ளி,கல்லூரிகளுக்கு அதிரடி உத்தரவு..!

Spread the love

தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்றால் இதுவரை 37 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நிலையில், தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று பரவலை தடுக்க பள்ளி மற்றும் கல்லூரிகளில் பின்பற்றப்படவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

விடுதிகளில் சாப்பிடும் போது சில்வர் தட்டுக்கு பதில் மாணவர்களுக்கு ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் வாழை மட்டையால் ஆன தட்டுகளை வழங்கவேண்டும். மேலும் வகுப்பறைகளில் குளிர்சாதன கருவிகளை செயல்படுத்தக்கூடாது. கூட்டம் சேரும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதை கல்லூரிகள் தவிர்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.


Spread the love
Related Posts