பிரபல நடிகை ஷோபனாவுக்கு ஒமிக்ரான் வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரித்து வருவதால், திரையுலகம் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. பொங்கலுக்கு ரிலீசாவதாக இருந்த வலிமை, ராதே ஷ்யாம், ஆர்.ஆர்.ஆர் என அடுத்தடுத்து படங்களின் ரிலீஸ் தள்ளிப்போடப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும், சமீப காலமாக திரைப்பிரபலங்கள் ஏராளமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுவது தொடர்கதை ஆகி வருகிறது.
கடந்த மாதம் நடிகர்கள் கமல்ஹாசன், விக்ரம் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பெற்று மீண்டனர். கடந்த வாரம் நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதேபோல் நடிகை மீனாவும் அவரது குடும்பத்தினரும் கொரோனாவின் பிடியில் சிக்கினர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகை திரிஷா, ஷெரின், நடிகர் சத்யராஜ் ஆகியோர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று நடிகர் விஷ்ணு விஷாலுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.
இந்நிலையில், பிரபல நடிகை ஷோபனா தற்போது கொரோனா பாதிப்பில் சிக்கி உள்ளார். அவருக்கு ஒமிக்ரான் வகை தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இரண்டு டோஸ் தடுப்பூசியும் போட்டுக்கொண்டதால் தனக்கு பாதிப்பு குறைவாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த ஒமிக்ரானுடன் பெருந்தொற்று முடிவுக்கு வர வேண்டிக்கொள்கிறேன் என ஷோபனா தெரிவித்துள்ளார். அவர் விரைவில் நலம் பெற வேண்டி ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.