இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,033 ஆக அதிகரித்து உள்ளதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தென் ஆப்ரிக்காவில் கடந்த மாதம் முதன் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரசான ‘ஒமிக்ரான்’, குறுகிய நாட்களில் 100ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இதன் பாதிப்பு எண்ணிக்கை மிக அதிகமாகி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக இந்தியாவிலும் ஒமிக்ரான் தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 4,033 ஆக அதிகரித்து உள்ளதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 1216 பேர் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து டெல்லியில் 513 பேரும் கேரளாவில் 333 பேரும், தெலங்கானாவில் 123 பேரும், குஜராத்தில் 236 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ராஜஸ்தான் 529, கர்நாடகா 441, தமிழ்நாடு 185, ஆந்திர பிரதேசம் 28, மத்தியப் பிரதேசம் 10, மேற்கு வங்கம் 27, ஹரியானா 123 பேரும் பாதிக்கபட்டுள்ளனர்.
அதே போல் ஒடிஷா 74, ஜம்மு காஷ்மீர் 3, உத்தரப்பிரதேசம் 113, சண்டிகர் 3, லடாக்1, உத்தரகாண்ட் 8, ஹிமாச்சல் பிரதேசம் 1, மணிப்பூர் -1, கோவா -19, மேகாலயா 4, பஞ்சாப் -27, அசாம் 9, அந்தமான் 3, சட்டிஸ்கர் 1, புதுச்சேரி 2, மணிப்பூர் ஒருவர் என ஒமைக்ரானால் பாதிக்கப்ட்டுள்ளனர். மேலும் ஓமிக்ரான் பாதிப்பில் இருந்து இதுவரை 1,552 பேர் குணமடைந்துள்ளதகவும் தெரிவிக்கபட்டுள்ளது.