தீபாவளிக்கு சொந்த ஊர் கிளம்பிட்டீங்களா? – உங்க ஊருக்கு ஆம்னி பஸ் டிக்கெட் விலை இதுதான்!!

சென்னை எழிலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினருடன் தீபாவளி கால கட்டண நிர்ணயம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

அதையடுத்து, விழாக் காலங்களில் வசூலிக்கப்படும் குறைக்கப்பட்ட கட்டண விவரத்தை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு விழா கால கட்டணத்தில் 25 சதவீதம் குறைக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக குறைக்க அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்கத்தான் தாங்கள் வந்துள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூறினர்.

தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தை முடிவில், விழா கால கட்டணத்தில் 30 சதவீதம் குறைத்துக்கொள்ள ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஒப்புக்கொண்டனர். இந்நிலையில், குறைக்கப்பட்ட கட்டண விவரத்தை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வெளியிட்டுள்ளனர். அதன் விவரம் பின்வருமாறு:-

சென்னை முதல் கோயம்புத்தூர் : 1,725 ரூபாய் முதல் 2,874 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னை முதல் சேலம் : 1,363 ரூபாயும், அதிகபட்சமாக 1,895 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னை முதல் திருநெல்வேலி : 1,960 ரூபாய் முதல் 3,268 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னை முதல் மதுரை : 1,688 ரூபாயும் அதிகபட்ச கட்டணமாக 2,554 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னை முதல் திருச்சி : 1,325 ரூபாயும் அதிகபட்சமாக 1,841 ரூபாயும் வசூலிக்கப்படும்.

சென்னை முதல் நாகர்கோவில் : 2,211 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் 3,765 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த குறைக்கப்பட்ட கட்டணத்தை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சிவசங்கர் எச்சரித்துள்ளார்.

Total
0
Shares
Related Posts