எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் மக்களவையே தற்போது விவாத போர்க்களமாக மாறி உள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து உரையாடிய திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு கூறியதாவது :
அரசுக்கு பெரும்பான்மை இல்லாத போது மசோதாவை உங்களால் எப்படி நிறைவேற்ற முடியும்?
ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான மசோதாக்களை நாங்கள் எதிர்க்கிறோம்.
இந்த மசோதாக்களை நிறைவேற்ற அரசுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை என்கிற சூழலில், எப்படி நிறைவேற்றுவீர்கள்?
இந்த விவகாரத்தை நிலைக்குழுவின் விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டு பரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
Also Read : Tongue Splitting விவகாரம் – விசாரணைக் குழு அமைத்தது மருத்துவத்துறை..!!
இதையடுத்து நிச்சயம் மசோதா கூட்டு குழுவிற்கு விவாதத்திற்காக அனுப்பப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அறிவித்தார்
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நமது அரசியல் சாசனத்தின் அடிப்படை
கட்டமைப்புகளுக்கு எதிரானது.
சட்ட மசோதா பிரிவு 83, 82 ஆகியவற்றில் செய்யும் திருத்தங்கள் ஒன்றுக்கொன்று முரண்பாடானது.
சட்ட திருத்தத்தின் மூலம் மாநில சட்டமன்றங்களின் தன்னாட்சி அதிகாரங்கள் பறிக்கப்படும்.
சட்டப்பிரிவுகள் தேர்தல் ஆணையத்திற்கு எல்லையற்ற அதிகாரங்கள் வழங்கவும் வகை செய்கிறது.
ஒரு சட்டத்தை ஒரு தனிமனிதன் முடிவு செய்வதா? உண்மையான தேர்தல் சீர்திருத்தம் அல்ல என திரிணாமூல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான நேரடி தாக்குதலாகவே ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதா அமைந்துள்ளது எனக்கூறி உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி மக்களவையில் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.