ஒடிசா அரசு பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் ஊதியத்துடன் ஒருநாள் விடுப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் 78வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், ஒடிசாவின் கட்டாக்கில் நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் அம்மாநில துணை முதல்-மந்திரி பிராவதி பரிடா கலந்து கொண்டார்.
அப்போது, பணிக்கு செல்லும் பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் ஊதியத்துடன் ஒருநாள் விடுப்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இந்தத் திட்டம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க : வேகமாக பரவும் குரங்கு அம்மை.. அவரநிலை எச்சரிக்கை விடுத்த WHO!!
அதுமட்டுமல்லாமல், மாநில அரசு பெண் ஊழியர்களுக்கு மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களும், மாதவிடாய் நாட்களில் முதல் அல்லது 2வது நாளில் இந்த விடுப்பை எடுத்துக் கொள்ளலாம் என்றும், இந்தத் திட்டம் பெண்களின் உடல் ஆரோக்ய நலனில் சிறப்பானதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்தியாவில் கேரளா மற்றும் பீகார் மாநிலங்களில் மட்டும்தான் மாதவிடாய் விடுமுறை அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது ஒடிசாவும் அதில் இணைந்துள்ளது.