ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 16க்கும் மேற்பட்டோர் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு வழக்கறிஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி அவர் புதிதாக கட்டிவரும் வீட்டின் முன் மர்மநபர்களால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார் .
தமிழகத்தை உலுக்கிய இந்த கொடூர கொலை வழக்கில் 16 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான திருவேங்கடம் போலீசின் பிடியில் இருந்து தப்பித்தபோது என்கவுன்டர் மூலம் கொல்லப்பட்டார்.
Also Read : இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்வோர் வருமான வரி அனுமதி சான்றிதழ் பெறுவது கட்டாயம்..!!
இதையடுத்து இந்த கொலை வழக்கில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களும் சம்மந்தப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கு இன்னும் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏராளமான வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது சிவா என்ற மேலும் ஒரு வழக்கறிஞர் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான சிவா, பிரபல ரவுடி சம்போ செந்திலுடன் தொடர்பில் இருந்தவர் என்றும் இந்த கொலை வழக்கில் பணப் பட்டுவாடாவிலும் ஈடுபட்டுள்ளார் என்றும் தனிப்படை போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர் .