பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் என்ற இளைஞரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி மாலை அவர் புதிதாக கட்டிவரும் வீட்டின் முன் மர்மநபர்களால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார் .
தமிழகத்தை உலுக்கிய இந்த கொடூர கொலை வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக பார்க்கப்பட்ட ரவுடி திருவேங்கடம் கடத்த சில தினங்களுக்கு முன் போலீசாரால் என்கவுண்டரில் கொல்லப்பட்டார் .
Also Read : இந்தியன் 2 படத்தின் 15 நிமிட காட்சிகள் நீக்கம் – படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!
இந்நிலையில் மீதம் இருக்கும் கொலையாளிகளுடன் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்போது இந்த கொலை மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் என்ற இளைஞரை தனிப்படை போலீசார் கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் இதுவரை 14 பேர் கைதான நிலையில் தற்போது மேலும் ஒருவர் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.