தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி – வெளியான அறிவிப்பு!!

தமிழகத்தில் வரும் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசுகள் வெடிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தீபாவளி அன்று பட்டாசுகள், புத்தாடை, பலகாரங்கள் என மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. ஆனால், இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது. நோயாளிகளுக்கு சிரமங்கள் வரக்கூடாது என்று தமிழக அரசால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, சீனப் பட்டாசுகளுக்கு தடை விதித்து, பமாறாக சுமை பட்டாசுகளை அதிகம் பயன்படுத்த வேண்டும் எனவும், நாள் முழுவதும் பட்டாசுகள் வெடித்து புகை மண்டலமாக்கி பலரையும் சுவாசப் பிரச்சினைக்குள் தள்ளாத வகையில் இருக்க கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும், காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசுகள் வெடிக்கலாம் என்றும், பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தீபாவளி அன்று காற்றின் தரம் தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனவும், இதற்கான ஏற்பாடுகள் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் தீவிரமாக மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நேற்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில்..

“சுற்றுச்சூழலை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக பசுமை பட்டாசுகளை பயன்படுத்த மக்கள் முன்வர வேண்டும்.

இதில் இயற்கை வேதிப்பொருட்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. செயற்கையான வேதிப்பொருட்கள் கலக்கும் போது நுரையீரல் பாதிக்கப்படும். இதைப் புரிந்து கொண்டு மக்கள் செயல்பட வேண்டும்.

அதுமட்டுமல்லாமல், பசுமை பட்டாசுகளில் டெசிமல் 100 முதல் 110 வரை மட்டுமே உள்ளது. தமிழக பட்டாசுகளுக்கு சர்வதேச மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு உள்ளது.

எனவே, பசுமை பட்டாசுகளை அதிக அளவில் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காற்று மாசுபாட்டை குறைக்க மரங்கள் அதிக அளவில் நட வேண்டும். இந்த விஷயத்தை கையிலெடுத்துள்ள தமிழக அரசு, குறுங்காடுகள் வளர்ப்பில் கவனம் செலுத்தி வருகிறது என்று கூறினார்.

Total
0
Shares
Related Posts