ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை இன்று மாலை திறக்கப்பட உள்ளதாக கோயில் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சபரிமலை ஐயப்பன் கோயில் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
நடப்பாண்டில் ஆடி மாதம் பூஜைக்காக இன்று ஜூலை 15 ஆம் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலையில் நடை திறக்கப்படுகிறது.
Also Read : 17 ஆண்டுகளுக்கு பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா – கொண்டாட்ட மழையில் ரசிகர்கள்..!!
நாளை ஜூலை 16 அதிகாலை 5 மணிக்கு சபரிமலையில் நெய் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
பக்தர்கள் விர்சுவல் கியூ ஆர் கோடு மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து தரிசனம் பெறுமாறு கோயில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் விசேஷ பூஜைகள் நடைபெற உள்ள நிலையில் கோவில் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பணியில் சுமார் 7,500 போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.