சாராயம் காய்ச்சி ,விற்பனை செய்தவர்களை அழைத்துப் பேச மதுவிலக்கு ஆய தீர்வை துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் அன்று முதல் இன்று வரை காலம் காலமாக கள்ள சாராய விற்பனை அமோகமாக நடைபெற்ற வருகிறது . தமிழக அரசால் தடைசெய்ப்பட்ட இந்த கள்ள சாராயத்தை குடித்து ஏராளமான குடிமகன்கள் அவ்வப்போது உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது.
தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மறைமுகமாக விற்கப்படும் இந்த கள்ள சாராயத்தை ஒடுக்க தமிழக அரசும் காவல்துறையும் எவ்ளவோ முயற்சி செய்தும் இன்று வரை அதனை முழுமையாக ஒடுக்க முடியவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.
அதனை உறுதி செய்யும் வகையில் கடந்த ஜூன் 19 ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விற்கப்பட்ட கள்ள சாராயத்தை குடித்த 100க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதில் 60 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்
இந்நிலையில் சாராயம் காய்ச்சி ,விற்பனை செய்தவர்களை அழைத்துப் பேச மதுவிலக்கு ஆய தீர்வை துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக முழுவதும் அனைத்து மாவட்டங்களில் முன்பு சாராயம் காய்ச்சி விற்பனை செய்து தண்டனை பெற்று தற்போது வேறு தொழில்களில் ஈடுபட்டு வருவோர் ஒரு மாவட்டத்திற்கு 300 முதல் சுமார் 1000 பேர் வரை இருக்கின்றனர் . அவர்களை அழைத்து மாவட்ட வாரியாக கூட்டம் நடத்தி அவர்களுக்கு தேவையான உதவிகள் என்ன என்ற விவரத்தை பெறுமாறு மதுவிலக்கு ஆய தீர்வை துறை உத்தரவு பிறப்பித்துள்ளது .