புற்றுநோய் காரணமாக இன்று உயிர்ழந்த துணை நடிகரின் உடலுக்கு இசையமைப்பாளர் டி இமான் இறுதிச் சடங்கு நடத்தி, தகனம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2009-ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் நடித்த ‘படிக்காதவன்’ நடித்து பிரபலமான துணை நடிகர் பிரபு.
இதனை தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து பிரபலமான துணை நடிகர் கிடைக்கும் பணத்தை நண்பர்களுடன் சேர்ந்து, மது, புகையிலைபாக்கு போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமையாகி செலவு செய்துள்ளார்.
இந்த நிலையில் தவறான பழக்கங்கள் காரணமாக புற்று நோய்க்கு ஆளானார்.கொரனோ கால கட்டத்தில் வறுமை நிலையை அடைந்ததால் புற்றுநோய்க்கான சிகிச்சை மேற்கொள்ள முடியவில்லை.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தங்கி வந்துள்ளார்.இந்த தகவலை அறிந்த இசையமைப்பாளர் டி இமான் அவரது மருத்துவ சிகிச்சைக்கு உதவிகள் செய்து வந்தார்.
ஆனால் நாளைடைவில் புற்று நோய் முற்றியதன் காரணமாக தற்காலிக சிகிச்சை மட்டுமே பிரபு எடுத்துக்கொண்ட நிலையில், இன்று உயிரிழந்தார்.
இதை தொடர்ந்து பிரபுவின் உடலுக்கு இசையமைப்பாளர் டி இமான் இறுதிச் சடங்குகள் செய்து உடலை தகனம் செய்துள்ளார்.