தாலிபான்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆப்கானிஸ்தான் மீது நள்ளிரவில் பாகிஸ்தான் நடத்திய தொடர் வான்வழி தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தின் பர்மால் மாவட்டத்தில், பாகிஸ்தான் நேற்று இரவு திடீரென வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
Also Read : அண்ணா பல்கலை.மாணவி பாலியல் வன்கொடுமை – போலீசார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பொறுப்பேற்றுள்ள நிலையில் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என தாலிபான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்தினர் மீது சமீப காலங்களில் பாகிஸ்தான் தலிபான்கள் என அழைக்கப்படும் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தானில் ஆளும் தலிபான்கள்தான் ஆதரவு தனது வருவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது .