பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேந்த 4 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் முக்கிய குற்றவாளியான வெங்கடேஷ் விசாரணையின்போது தப்ப முயன்றபோது போலீசார் அவரை சுட்டுப்பிடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே குடியிருப்புப் பகுதியில் மது அருந்தியதைத் தட்டிக்கேட்ட, பல்லடம் சட்டமன்றம் பொங்கலூர் மேற்கு ஒன்றியம் மாதப்பூர் பஞ்சாயத்து கிளை தமிழ்நாடு பாஜக தலைவர் மோகன்ராஜ் உள்ளபட 4 நான்கு பேர் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டனர் .
வீட்டின் முன் மது அருந்தியவர்களை தட்டி கேட்டதற்காக ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் போதை கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும்,சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த குற்ற சம்பவத்தை கண்டித்து திரை பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தீவிர தேடுதல் வேட்டையின் பலனாக கொலையாளிகளை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாகிய இந்த கொடூர குற்ற சம்பவத்தில் மணப்பாறையை சேர்ந்த செல்லமுத்து என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான வெங்கடேஷ் மற்றும் சோனைமுத்து ஆகியோர் போலீசாரால் கைதுசெய்யப்பட்டனர் .
இந்நிலையில் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை பதுக்கி வைத்த இடத்தை, காட்ட அழைத்துச் செல்லும் போது முக்கிய குற்றவாளியான வெங்கடேஷ் யாரும் எதிர்பாராத நேரத்தில் தப்ப முயன்றுள்ளார் அப்போது ,அவரின் இரு கால்களிலும் சுட்டுப் பிடித்த போலீசார் அவரை தற்போது மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.