Site icon ITamilTv

Parandur அறப்போராட்டம் – சீமான் ஆதரவு

Parandur

Parandur

Spread the love

சென்னையை அடுத்து Parandur வானூர்தி நிலையம் அமைப்பதற்கு எதிராக ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களைச் சேர்ந்த அறப்போராட்டத்தை

நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தை அடுத்த Parandur சுமார் 500 ஏக்கரில் சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக நிலங்களை கையகப்படுத்த அரசு அனுமதி அளித்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தூரைச் சுற்றியுள்ள 13 கிராம மக்கள் 500 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த விமான நிலையத்துக்காக ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் முழுமையாக கையகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு எதிராக பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் நில எடுப்புக்கு தனி மாவட்ட அலுவலரை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் நில எடுப்புக்கான தனி மாவட்ட அலுவலராக இருக்கும் மா.நாராயணன் பரந்தூர் விமான நிலையத்தின் நில எடுப்புக்கான தனி மாவட்ட அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் நிலம் எடுப்புக்கான தனி மாவட்ட அலுவலராகவும் அவர் கூடுதல் பொறுப்பை கவனிக்க உள்ளார். இந்நிலையில் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்த போராட்டக் குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் பரந்தூரில் வானூர்தி நிலையம் அமைப்பதற்கு எதிராக ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களைச் சேர்ந்த அறப்போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது என சீமான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

பரந்தூரில் வானூர்தி நிலையம் அமைப்பதற்கெதிராக ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களைச் சேர்ந்த மண்ணின் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் .

550வது நாட்களாக நடத்தப்பட்டு வரும் இந்த அறப்போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது.

ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறை, ஒடுக்குமுறைகளுக்கு அஞ்சாது அயராது போராடி வரும் மக்களின் போர்க்குணமும், போராட்ட உணர்வும் போற்றுதற்குரியது.

Also Read : https://itamiltv.com/animal-movie-released-on-netflix/

இதே பற்றுறுதியோடும், உறுதிப்பாடோடும் இறுதிவரை நின்று, போராட்டத்தின் நோக்கத்தில் வெற்றியடைய எனது உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் .

மண்ணின் மக்களோடு எப்போதும் நாம் தமிழர் கட்சி துணைநிற்கும் என இச்சமயத்தில் உறுதியளிக்கிறேன் என சீமான் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love
Exit mobile version