பாரிஸ் பாராலிம்பிக் தொடரில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் சுமித் அன்டில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
உலகளவில் பிரபலமான ஒலிம்பிக் தொடர் இம்முறை பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது .
இந்நிலையில் தற்போது பிரான்ஸ் நாட்டின் புகழ் பெற்ற நகரமான பாரிஸில் பாராலிம்பிக் போட்டிகள் கடந்த சில நாட்களுக்கு முன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
செப்.8 வரை நடைபெற இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான 17ஆவது பாராலிம்பிக் போட்டி தொடரில் 184 நாடுகளைச் சேர்ந்த 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க்க உள்ளனர் .
Also Read : இந்திய கடற்படை தளம் குறித்து பாகிஸ்தானுக்கு தகவல் அளித்த 3 நபர்கள் கைது..!!
உலக புகழ் பெற்ற இந்த பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் 12 விளையாட்டுகளில் 32 பெண்கள் உட்பட 84 பேர் பங்கேற்கின்றனர் இதில் தமிழகத்தை சேர்ந்த வீரர் வீராங்கனைகளும் உள்ளனர்.
இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் 70.59 மீட்டர் வீசி இந்தியாவின் சுமித் அன்டில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இதேபோல் பாரிஸ் பாராலிம்பிக்ஸ் பேட்மிண்டனில் இந்திய வீரர் நிதேஷ் குமார் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் .