உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கோண்டா என்ற பகுதியில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து நிகழ்ந்துள்ளது .
சண்டிகரில் இருந்து திப்ருகர் நோக்கி சென்று கொண்டிருந்த திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயில் உத்தரப் பிரதேச மாநிலம் ஜிலாஹி ரயில் நிலையத்திற்கும் கோசாய் திஹ்வாவிற்கும் இடையே வந்துகொண்டிருந்த போது ரயில் திடீரென தடம் புரண்டது.
எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட இந்த கோர விபத்தில் ரயிலின் 10 முதல் 15 பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன .
இதையடுத்து தகவல் அறிந்து வந்த மீட்டு குழுவினர் உள்ளூர் மக்களுடன் சேர்ந்து மீது பணியில் ஈடுபட்டுள்ளனர் . இந்த விபத்தில் பயணிகள் பலர் காயமடைந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்கள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.