Ladakh protest -மாநில அந்தஸ்து கோரி லடாக்கில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவு ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்தது.
அந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்த மத்திய அரசு, ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.
மேலும் ஜம்மு காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும் லடாக் மற்றொரு யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டது.
இதையும் படிங்க: Vijay politics-”சாதி, மத பிளவுகளுக்கு..” திருமாவளவன் கொடுத்த அட்வைஸ்!
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமானது சட்டசபையை கொண்டது. ஆனால் லடாக் யூனியன் பிரதேசத்துக்கு சட்டசபை கிடையாது என மத்திய பாஜக அரசு அறிவித்தது.
இந்நிலையில் லடாக் யூனியன் பிரதேசத்துக்கு முழுமையாக தனி மாநில அந்தஸ்து வழங்கக்கோரி லே, கார்கில் மாவட்டங்களில் நேற்று (பிப். 03) போராட்டம் நடைபெற்றது.
அந்த போராட்டத்தில் மாநில அந்தஸ்து வழங்குதல், பழங்குடியினர் அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு ,ஆறாவது அட்டவணையில் லடாக்கைச் சேர்த்தல், உள்ளூர் மக்களுக்கு
இதையும் படிங்க: காவிரி நீரை முழுமையாகப் பெற முடியாமல் வேடிக்கை பார்க்கும் திமுக – இபிஎஸ் கண்டனம்!
வேலை இட ஒதுக்கீடு வழங்குதல், லே மற்றும் கார்கிலுக்கு தலா ஒரு நாடாளுமன்ற இருக்கை வழங்குதல் உள்ளிட்ட நான்கு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இதனை தொடர்ந்து லே, கார்கில் மாவட்டங்களில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் `லே சலோ’ என முழக்கமிட்டனர். சிலர் இந்திய தேசிய கொடியை கைகளில் ஏந்தியும் மாநில அந்தஸ்து கோரி முழக்கங்களை எழுப்பினர்.
இது தொடர்பாக லடாக் போராட்ட குழுவினர் கூறுகையில், “எங்களுக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். லடாக் மாநிலத்துக்கு சட்டசபையை உருவாக்க வேண்டும்.
இதையும் படிங்க: https://x.com/ITamilTVNews/status/1754397734910541841?s=20
லடாக் தனி மாநிலத்தை பழங்குடிகள் பிரதேசமாக பிரகடனப்படுத்தி அரசியல் சாசனத்தின் 6வது பிரிவில் இணைக்க வேண்டும்.
அத்துடன் லே, கார்கில் ஆகிய மாவட்டங்களை 2 மக்களவை தொகுதிகளாகவும் அறிவித்து மக்களவையிலும் பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும்.
இதனை வலியுறுத்தியே முழு அடைப்புப் போராட்டம்(Ladakh protest) நடத்தப்படுகிறது” என தெரிவித்தனர்.