ஒரே நாளில் 15 கின்னஸ் உலக சாதனையை முறியடித்த அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் ரஷ் என்ற நபருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் ரஷ் என்பவர் எப்போதும் துறுதுறுவென இருப்பவர் என்று கூறப்படுகிறது . விளையாட்டு சமூக நலன் உள்ளிட்ட பல நல்ல விஷயங்களில் அதீத ஆர்வம் கொண்ட இவர் உலக சாதனைகளை படைப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
இதுவரை நடந்துள்ள உலகசாதனைகளை ஆய்வு செய்த டேவிட் ரஷ் அதில் எதையேல்லாம் தம்மால் செய்யமுடியுமா அதை தேர்வு செய்து கடுமையாக பயிற்சிகளை மேற்கொண்டு உலக சாதனைகளை படைத்தும் ஏற்கனவே இருக்கும் உலக சாதனைகளை முறியடுத்தும் வருகிறார்.
அந்தவகையில் தற்போது டேவிட் ரஷ் ஒரே நாளில் 15 கின்னஸ் உலக சாதனையை முறியடித்துள்ளதாக வியக்க வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
Also Read : தமிழகத்தில் அதிகனமழைக்கு வாய்ப்பு – எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!!
முதலில் ஜக்கிலிங் வித்தை (3 ஆப்பிள்களை ஒன்றன் பின் ஒன்றாக தூக்கிப்போட்டு ஒரு நிமிடத்திற்குள் அதிக முறை அதை கடித்து சாதனை படைத்துள்ளார் )
2வதாக டேபிள் டென்னிஸ் பந்துகளை 2 பாட்டில் மூடிகளில் 10 முறை துள்ளச்செய்வது, வாயிலிருந்து சுவரில் பந்தை அடித்து பிடித்தல், அமர்ந்தபடி பலூன்களை உடைத்தல்.
30 வினாடிகளில் அதிக டி-ஷர்ட்கள் அணிதல், 10 டாய்லெட் பேப்பர் ரோல்களை ஒரு கையில் அடுக்கி வைத்தல் என 15 உலக சாதனைகளை செய்து அசத்தியுள்ளார். இவர் தனது வாழ்நாளில் இதுவரை 250 உலக சாதையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.