வாழ்நாள் முழுவதும் இளமையாக இருக்க அமெரிக்காவை சேர்ந்த தாய்-மகன் எடுத்த விபரீத முடிவு தற்போது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் ‘மனதி பார்பி’ என அறியப்படும் 47 வயதான மார்செலா இக்லெசியாஸ், நிரந்தரமான இளமை தோற்றத்தைப் பெற தனது 23 வயது மகனின் ரத்தத்தை மாற்றிக்கொள்ளவுள்ளதாக (BLOOD TRANSFUSION) அறிவித்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார்.
Also Read : காதலியை Impress செய்ய நினைத்து அநியாயமாய் உயிரை விட்ட காதலன்..!!
மார்செலா இக்லெசியாஸ்சின் இந்த முடிவுக்கு அவரது மகனும் முழு சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது . ஏற்கனவே பார்பியாக தன்னை உருமாற்றிக்கொள்ள மார்செலா லட்சக் கணக்கில் செலவு செய்துள்ள நிலையில் இந்த விபரீத சிகிச்சையை பாதுகாப்பாக மேற்கொள்ள நல்ல கைதேர்ந்த மருத்துவரை தேடி வருதாகவும் மார்செலா இக்லெசியாஸ் தெரிவித்துள்ளார்.
47 வயதில் இந்த மனித பார்பி எடுத்துள்ள இந்த முடிவுக்கு பலரும் பல விதமான கருத்துக்களை இணையத்தில் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.