அமெரிக்காவில் பெட்ரோ ஆர்டெகா (26) என்பவர் செல்லமாக வளர்த்த 3 American Bully நாய்கள் தாக்கியதில் 4 வயது மகனின் கண் முன்னே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
என் வீட்டு கன்னுகுட்டி என்னோட மல்லுக்கட்டி என் மார்பில் முட்டுதடி கண்மணி என்ற பழமொழி போல் தான் ஆசை ஆசையாக வளர்த்த செல்ல நாய்கள் சற்றும் எதிர்பாராத நேரத்தில் பெட்ரோவை தாக்கியதில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார்.
இதையடுத்து பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் நாய்கள் கடுமையாக நடந்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை என கூறப்டுடுகிறது.
ஏற்கனவே அமெரிக்காவில் அரக்க குணம் கொண்ட நாய்களை கருணை கொலை செய்ய அந்நாட்டு அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது இதுபோன்ற ஒரு சம்பவம் அந்நாட்டில் நிகழ்ந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.