ITamilTv

‘ஆபரேஷன்’ குறித்து… ஆல்யா மானசாவின் போட்ட உருக்கமான பதிவு!அதிர்ச்சியில் ரசிகர்கள்

Spread the love

கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலம் அறிமுகம் ஆனவர் தான் ஆல்யா மானசா.இதனை தொடர்ந்து சின்னத்திரையில் ராஜா ராணி சீரியல் மூலம் நடிக்க தொடங்கினார்.இந்த நிலையில் சீரியலில் நடித்து கொண்டு இருந்த நடிகர் சஞ்ஜிவ்வை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு தற்போது ஒரு மகளும், மகனும் உள்ளனர்.இவர்களுக்கு தற்போது ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் சன் டிவி-யில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் ஹீரோவாக சஞ்சீவும், அதே சேனலில் ஒளிபரப்பாகும் இனியா சீரியலில் ஆல்யா ஹீரோயினாகவும் தற்போது நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் ஆல்யாவுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர் காலில் கட்டுடன் சக்கர நாற்காலியில் படப்பிடிப்புக்கு வந்த வீடியோக்கள் கூட இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை  ஏற்படுத்தியது.மேலும் எலும்பு முறிவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சைக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

இது குறித்து  தற்போது அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டகிராம் போஸ்ட்டில்,

“அறுவை சிகிச்சைக்கு தயாராகிக் கொண்டிருக்கிறேன். கொஞ்சம் பயமாக இருக்கிறது. ஆனால் சஞ்சீவின் மனைவியாக இருப்பதால் நான் பாக்கியசாலி.

ஏனென்றால் அவர் என்னை கவனிக்க தவறியதில்லை. எனது நல்ல மற்றும் கெட்ட நேரங்கள் அனைத்திலும் உறுதுணையாக இருப்பார். என்னை ஒரு பாரமாக பார்க்கமாட்டார். அதனால் தான் என் வாழ்க்கை எப்போதும் அழகாக இருக்கிறது. எனக்கு கடவுள் கொடுத்த பரிசு சஞ்சீவ்” என பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்த பதிவு தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 


Spread the love
Exit mobile version