Site icon ITamilTv

பைக் வைத்திருப்பவர்களே உஷார்! – இதை செய்யாவிட்டாலும் அபராதமாம்..

Spread the love

இந்தியாவில் இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்றாலும், பலர் விதிமுறையை பின்பற்றுவதில்லை . ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவது நாட்டில் மிகவும் பொதுவான குற்றமாகும். தற்போது, ​​சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்பைக் குறைக்கும் வகையில், இந்திய அரசு விதிகளை இன்னும் கடுமையாக்கியுள்ளது.

இந்த நிலையில் டாடா குழும நிறுவனங்களின் முன்னாள் இயக்குநர் சைரஸ் மிஸ்திரி அண்மையில் சாலை விபத்தில் பலியானதை தொடர்ந்து, சாலை விபத்துகளை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. வாகனங்களை அதிவேகமாக இயக்குவது முதல் மது அருந்தி வாகனம் ஓட்டுவது வரையில் விபத்துகளுக்கு பல காரணங்கள் இருக்கின்றன. கடந்த 2020ஆம் ஆண்டில் சாலை விபத்துகள் மூலமாக உயிரிழந்தவர்களில் 11 சதவீதம் விபத்துகள் என்பது சீட் பெல்ட் அணியாமல் சென்றதன் காரணமாக ஏற்பட்டுள்ளது.

ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அதை முறைப்படி அணிய தவறினாலும் அபராதம் உண்டு என்பது பலருக்கும் தெரியாத தகவலாக உள்ளது. அதாவது ஹெல்மெட்டில் உள்ள ஸ்டிராப்-ஐ நீங்கள் முறையாக அணிந்திருக்க வேண்டும். ஒருவேளை ஸ்டிராப் போடாவிட்டால் அந்த பயணி ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத ஹெல்மெட் அணிவதும் குற்றச் செயலாகும். கண்களை மறைக்கும் வகையில் கண்ணாடி இருக்க வேண்டும்.

ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அதை முறைப்படி அணிய தவறினாலும் அபராதம் உண்டு என்பது பலருக்கும் தெரியாத தகவலாக உள்ளது. அதாவது ஹெல்மெட்டில் உள்ள ஸ்டிராப்-ஐ நீங்கள் முறையாக அணிந்திருக்க வேண்டும். ஒருவேளை ஸ்டிராப் போடாவிட்டால் அந்த பயணி ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத ஹெல்மெட் அணிவதும் குற்றச் செயலாகும். கண்களை மறைக்கும் வகையில் கண்ணாடி இருக்க வேண்டும். பிஐஎஸ் சான்றிதழும் அவசியம்.

இந்த நிலையில் குழந்தைகளும் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும். அவர்களுக்கான பாதுகாப்பு பெல்ட் பயன்படுத்தப்படுவது அவசியமாகும். குழந்தைகளுடன் செல்லும் இரு சக்கர வாகனங்கள் 40 கி.மீ. வேகத்தில் தான் பயணிக்க வேண்டும். இந்த விதிகளை மீறும் பட்சத்தில் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.

மேலும் குழந்தைகளும் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும். அவர்களுக்கான பாதுகாப்பு பெல்ட் பயன்படுத்தப்படுவது அவசியமாகும். குழந்தைகளுடன் செல்லும் இரு சக்கர வாகனங்கள் 40 கி.மீ. வேகத்தில் தான் பயணிக்க வேண்டும். இந்த விதிகளை மீறும் பட்சத்தில் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.

வாகனங்களில் மிக அதிகமான பாரம் ஏற்றிச் சென்றால் ரூ.20 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். குறிப்பாக வாகன ஓட்டுநர் கூடுதலாக ரூ.2,000 அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

வாகனங்களில் மிக அதிகமான பாரம் ஏற்றிச் சென்றால் ரூ.20 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். குறிப்பாக வாகன ஓட்டுநர் கூடுதலாக ரூ.2,000 அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

மேலும் நாடெங்கிலும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஒரு மாதிரியான லைசென்ஸ் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் இந்த உரிமம் என்பது 102 நாடுகளில் செல்லுபடியாகும். இதனால் வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்களுக்கு சிக்கல் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் ஒரு மாதிரியான லைசென்ஸ் வழங்க மத்திய அரசு புதிய தரப்படுத்தப்பட்ட வடிவத்தில், கையேட்டில் QR குறியீடு சேர்க்கப்படும். இதில் ஓட்டுனர் தொடர்பான தரவு இருக்கும், இதனால் மற்ற நாடுகளில் உள்ள அதிகாரிகள் அதை எளிதாக சரிபார்க்க முடியும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


Spread the love
Exit mobile version