பிச்சைக்காரன் -2’ படத்தின் ‘பிகிலி’ பாடலில் சிறப்பு தோற்றத்தில் இடம்பெற்றுள்ள புதுச்சேரியின் மறைந்த கோயில் யானை லட்சுமி நடிதுள்ளதாக தகவல் வெளியான நிலையில் மக்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி நடை பயிற்சி மேற்கொண்ட போது மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவில் புதுச்சேரியில் அமைத்துள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த 1996-ம் ஆண்டு தனியார் நிறுவனம் சார்பில் ஐந்து வயதில் யானை ஒன்று வழங்கப்பட்டு லட்சுமி என்று பெயர் சூட்டப்பட்டது.
இந்த யானை மற்ற கோவில் யானைகள் போல் அல்லாது மக்களுடன் மிகவும் அன்புடன் பழகி வந்துள்ளது. நாள்தோறும் கோவிலுக்கு வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்த லட்சுமி யானை, பக்தர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் வழக்கம் போல் தினமும் காலை 6 மணிக்கு கோவில் வீதியில் நடைபயிற்சிக்கு செல்லும் யானை லட்சுமி, இன்று காலையும் காமாட்சி அம்மன் கோவில் வீதியில் பாகனுடன் நடைபயிற்சிக்கு சென்றது. அப்போது திடீரென மயங்கி விழுந்த லட்சுமி, சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தது.
புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் 25 ஆண்டுகலுக்கும் மேலாக பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்த யானை லட்சுமி உயிரிழந்த சம்பவம் ,பக்தர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.