ITamilTv

தமிழக மீனவர்கள் மீது மீண்டும் கடற்கொள்ளையர்கள் தாக்குதல்..! ரோந்து பணியில் கடலோர காவல்படை

Spread the love

விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்ற வேதாரண்யம் மீனவர்கள் மீது நேற்று இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்திய நிலையில் இன்று அதிகாலை மீண்டும் கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .

வேதாரண்யம் மீனவர்கள் 7 பேர் ஆற்காட்டுத்துறை கடற்கரையில் இருந்து 22 கடல் மைல் தூரத்தில் விசைப்படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர் . அப்போது திடீரென 3 பைபர் படகுகளில் வந்த இலங்கை கடல் கொள்ளையர்கள் தமிழக மீனவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தி.

கம்பி ,கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் மீனவர்களை தாக்கிய கடல் கொள்ளையர்கள் 800 கிலோ மீன்பிடி வலை, திசை காட்டும் கருவி, செல்போன் உள்ளிட்ட 5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறித்துச் சென்றனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை கடலுக்கு சென்ற வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 3 மீனவர்களை சுற்றி வளைத்த கடற்கொள்ளையர்கள் மீனவர்களை கொடூரமாக தாக்கி , படகில் வைத்திருந்த ஜிபிஎஸ் கருவி, வாக்கிடாக்கி, பேட்டரி, செல்ஃபோன், 20 லிட்டர் டீசலை கொள்ளையடித்துச் சென்றனர்

வேதாரண்யம் மீனவர்கள் மீது ஏற்கனவே நேற்று கொலைவெறி தாக்குதல் நடத்திய நிலையில் இன்று மீண்டும் இலங்கை கடற்கொள்ளையர்களால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது . இதனால் கடலோர காவல் படை போலீசார் தற்போது தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர் .


Spread the love
Exit mobile version