விபத்தில் சிக்கிய பிரபல பின்னணி பாடகி சின்மயி.!!

பிரபல பின்னணி பாடகி சின்மயி சென்ற கார் விபத்தில் சிக்கியுள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

தென்னிந்திய திரையுலகின் பிரபல பின்னணி பாடகியாக வலம் வருபவர் சின்மயி. திரையுலகில் பாடகியாக மட்டும் இல்லாமல் இவர் பல மொழி படங்களுக்கு குரல் கொடுத்ததும் உள்ளார் . இதுமட்டும் இன்றி அவர், சமூக பிரச்சினைகளுக்காகவும் பெண்களுக்காகவும் அடிக்கடி தனது சமூக வலைதளத்தில் பல புரட்சிகரமான பதிவுகளையும் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று 1-10-23 மாலை தான் சென்ற கார் விபத்தில் சிக்கியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அதிர்ச்சி தரும் பதிவு ஒன்றை சின்மயி போட்டுள்ளார்.

குழந்தைகளுடன் காரில் சென்றபோது குடிபோதையில் ஆட்டோ ஒட்டுநர் ஒருவர் கண்ணுமுன்னு தெரியாமல் வந்து மோதிவிட்டதாக அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் கார் மீது இடித்துவிட்டு நிற்காமல் அந்த ஆட்டோ ஓட்டுநர் தப்பித்து சென்றுவிட்டதாகவும் நாங்கள் பத்திரமாக தப்பித்ததை நினைத்து மகிழ்ச்சியடைகிறோம். தயவு செய்து குடித்துவிட்டு யாரும் வாகனம் ஓட்டாதீர்கள் என்றும் சின்மயி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் .

Total
0
Shares
Related Posts