இந்திய அணியின் நட்சத்திர கேப்டனாக திகழும் ரோஹித் ஷர்மாவுக்கு 15 வயது சிறுவன் உருக்கமாக எழுதிய கடிதம் இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.
கிரிக்கெட் விளையாட்டில் பல சாதனைகளை படைத்த ஹிட் மேன் ரோஹித் ஷர்மா தற்போது பார்ம் அவுட் ஆகி உள்ளது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே . இந்தியாவுக்காக இவர் ஆடிய பல ஆட்டங்களை கண்டு மெய் சிலிர்த்து போன நாம் இன்று அவர் பார்ம் அவுட்டாகி கஷ்டப்படும் சூழல் அவருக்கு உறுதுணையாக இல்லாமல் அவரது விமர்சித்து கொண்டிருக்கிறோம்.
Also Read : ஆப்பிள் ஆப் ஸ்டோரில் ChatGPT-ஐ முந்தி சீன செயலி சாதனை..!!
தொடர்ந்து கம் பேக் கொடுக்க கஷ்டப்படும் ரோஹித்துக்கு மறுபக்கம் ஆதரவாக சிலர் குறுந்செய்தி அனுப்பியும் கடிதம் அனுப்பியும் வருகின்றனர். அந்தவகையில் ரோஹித்திற்கு 15 வயது சிறுவன் எழுதியுள்ள கடிதம் தற்போது செம வைரலாக வலம் வருகிறது.
“சமீப காலங்களில் நீங்கள் நன்றாக விளையாடாததை பொருட்படுத்த வேண்டாம். வெறுப்பவர்கள் வெறுக்கத்தான் செய்வார்கள். ஆனால் உங்களின் தலைமை பண்பு சிறப்பாக உள்ளது.
தயவுசெய்து ஓய்வு அறிவித்துவிடாதீர்கள். நான் கிரிகெட் பார்ப்பதற்கு காரணமே நீங்கள்தான். உங்கள் ERA-ல் பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன்” என அச்சிறுவன் உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார் .