இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியைக் காண பிரதமர் மோடி அகமதாபாத் மைதானத்துக்கு நேரில் வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதவுள்ளன. இதற்காக இந்திய அணி வியாழன் கிழமையும் , ஆஸ்திரேலிய அணி வெள்ளிக்கிழமையும் நரேந்திர மோடி மைதானத்துக்கு வந்தடைந்தடைந்து.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி நாளை அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் நிலையில், இறுதிப் போட்டியை இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் ரிச்சர்ட் மார்லஸும் நேரில் காண உள்ளனர்.
இதனை தொடர்ந்து போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் ஆய்வு நடத்தினார். மைதானம், அணிகள், விஐபிகள் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நிர்வாகத்தை கவனிப்பதற்கு என 4,500 காவலர்களை ஈடுபடுத்துவது என அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இந்திய அணியில் விளையாடும் 11 வீரர்கள்:
கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், சூர்யா குமார் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சமி, முகமது சிராஜ், ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் ஆடும் 11 வீரர்களாக அணியில இடம் பெற்றுள்ளனர்.