உலக அளவில் சிறந்த மத்திய வங்கித் தலைவர்களின் ‘ஏ பிளஸ்’ என்ற முதன்மையான பிரிவில் சக்திகாந்த தாஸ் இடம்பெற்றுள்ள நிலையில் இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவைச் சோ்ந்த ‘குளோபல் ஃபைனான்ஸ்’ என்ற நிதி விவகாரங்கள் சார்ந்த இதழ், சிறந்த மத்திய வங்கித் தலைவர்களின் பட்டியலை 1994ஆம் ஆண்டு முதல் இந்த தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், நடப்பாண்டுக்கான தரவரிசை பட்டியலை ‘குளோபல் ஃபைனான்ஸ்’ என்ற இதழ், வெளியிட்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சி இலக்குகள், செலாவணி ஸ்திரத்தன்மை, பணவீக்கத்தை கட்டுப்படுத்துதல், வட்டி விகித மேலாண்மை உள்ளிட்ட நடவடிக்கைகளில், தங்களது உத்திகளின் மூலம் அடைந்த வெற்றியின் அடிப்படையில் உலக அளவில் சிறந்த மத்திய வங்கித் தலைவர்களின் பட்டியலை தயாரித்து வெளியிட்டுள்ளது.
இப்பட்டியலில், மிகச் சிறந்த செயல்பாட்டுக்கான ‘ஏ பிளஸ்’ என்ற முதன்மையான பிரிவில் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநா் சக்திகாந்த தாஸ் இடம்பெற்றுள்ளாா்.
இப்பட்டியலில், மிகச்சிறந்த செயல்பாட்டுக்கான ‘ஏ பிளஸ்’ என்ற முதன்மையான பிரிவில் ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் இடம்பெற்றுள்ளார்.
சக்திகாந்த தாஸை அடுத்து, ஸ்விட்சர்லாந்து மத்திய வங்கி ஆளுநர், மற்றும் வியட்நாம் மத்திய வங்கித் தலைவர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், உலக அளவில் சிறந்த மத்திய வங்கித் தலைவர்களின் ‘ஏ பிளஸ்’ என்ற முதன்மையான பிரிவில் இடம்பெற்றுள்ள சக்திகாந்த தாஸ்-க்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்விட் செய்துள்ள பிரதமர் மோடி, ”உலக அரங்கில் நாட்டின் நிதி தலைவர் அங்கீகரிக்கப்பட்டிருப்பது, பெருமையான தருணம். அவருடைய அர்ப்பணிப்பும் தொலைநோக்கு பார்வையும் நமது நாட்டின் வளர்ச்சிப் பாதையை தொடர்ந்து வலுப்படுத்துகிறது.” என்று பதிவிட்டுள்ளார்.