அதானி குழுமத்தின் முறைகேடுகளில் பிரதமர் மோடிக்கு தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் MP ராகுல் காந்தி(rahul gandhi )கடுமையாக சாடியுள்ளார்.
மும்பையில் இந்தியா கூட்டணி முடிந்த பிறகு சத்தீஸ்கர் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஏற்பாடு செய்திருந்த ‘யுவ மிதன் மாநாட்டில்’ ராகுல் காந்தி கலந்து கொண்டார். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மத்தியில் ராகுல் காந்தி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர்,அதானி குழுமத்தின் முறைகேடுகளில் பிரதமர் மோடிக்கு தொடர்பு இருப்பதாகவும் அதானி மீது விசாரணை நடத்த பிரதமர் மோடி உத்தரவிட முடியாது.
ஏனெனில் அது தொடர்பான விசாரணை நடைபெற்று உண்மை வெளிவந்தால் இழப்பு அதானிக்கு அல்ல. மோடிக்கு தான் . சட்டவிரோதமாக ரூ.1000 கோடி இந்தியாவில் இருந்து சென்று அதானி குழுமத்தின் மூலமாக முறைகேடான முறையில் முதலீடு செய்யப்பட்டு இருக்கிறது.
மேலும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டின் பொருளாதார முதுகெலும்பை உடைத்துவிட்டது என்றும், தேர்ந்தெடுக்கப்பட்ட வணிக நிறுவனங்களுக்காக அவர் பணியாற்றி வருவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் “ஜிஎஸ்டி மற்றும் நோட்டுப் பணமதிப்பு நீக்கம் சிறு வணிகர்களை அழித்துவிட்டது, இது பிரதமர் மோடியின் நண்பர்களுக்கு நன்மைகளை வழங்குவதற்காக செய்யப்பட்டது” என்று அவர் கூறினார்.