புகழுரைகளை மட்டும் விரும்பும் பிரதமர் மோடி..! – அசாதுத்தீன் ஒவைசி

பிரதமர் மோடி புகழுரைகளை மட்டும் விரும்புவதாக அசாதுத்தீன் உவைசி கடுமையாக சாடியுள்ளார்.

இதுகுறித்து ஹைதரபாத் எம்.பியும் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவருமான அசாதுதின் ஓவைசி செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியதாவது;-

வேளாண் சட்டங்களால் விவசாயிகள் உயிரிழந்தது குறித்து சத்யபால் மாலிக் பிரதமர் மோடியிடம் கேட்ட போது, பிரதமர் மோடி கோபம் அடைந்துள்ளார்.

இதன்மூலம் பொதுமக்களிடம் இருந்து மட்டுமல்ல, ஆளுநரிடம் இருந்து கூட உண்மை நிலையை கேட்டறிந்து கொள்ள பிரதமர் மோடி விரும்பவில்லை என்பது நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி புகழுரைகளை மட்டுமே விரும்புகிறார்” என்றார்.

Total
0
Shares
Related Posts