பிரதமர் நரேந்திர மோடி(pm modi) மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லி ராஜ்காட்டில் அவருக்கு மரியாதை செலுத்தினார்.
காந்தி ஜெயந்தி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 02 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாள் நமது தேசத் தந்தை மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறது.ஆங்கிலேய அரசுக்கு எதிராகக் குரல் எழுப்ப அனைவரையும் தூண்டியவர். ஆங்கிலேயர்களின் இரக்கமற்ற போர்களில் காந்தி அகிம்சை மற்றும் சத்தியாகிரகத்தைப் பின்பற்றத் தேர்ந்தெடுத்தவர்.
இந்த நிலையில்,இன்று பிரதமர் நரேந்திர மோடியு காந்தியின் 150வது ஜெயந்தியை முன்னிட்டு டெல்லி ராஜ்காட்டில் அவருக்கு மரியாதை செலுத்தினார்.மகாத்மா காந்தியின் தாக்கம் உலகளாவியது என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில்..காந்தி ஜெயந்தியின் சிறப்பு சந்தர்ப்பத்தில் நான் மகாத்மா காந்திக்கு தலைவணங்குகிறேன். அவருடைய காலத்தால் அழியாத போதனைகள் நமது பாதையை விளக்கிக்கொண்டே இருக்கின்றன. மகாத்மா காந்தியின் தாக்கம் உலகளாவியது, ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் ஒற்றுமை மற்றும் இரக்கத்தின் உணர்வை மேலும் மேம்படுத்துவதற்கு ஊக்கமளிக்கிறது.
அவருடைய கனவுகளை நனவாக்க நாம் எப்போதும் உழைப்போம். ஒவ்வொரு இளைஞரும் அவர் கனவு கண்ட மாற்றத்தின் தலைவராக எல்லா இடங்களிலும் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வளர்க்க அவரது எண்ணங்கள் உதவட்டும்” என்று பிரதமர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.