முத்துராமலிங்க தேவருக்கு பிரதமர் மோடி தமிழில் புகழாரம்!

முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழாவிற்கு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டத்தில் அவர் பிறந்த ஊரான பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின்(muthuramalinga thevar) 116வது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை இன்று நடைபெறுகிறது.

இதற்கான விழா அவரது நினைவிடத்தில் கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி தொடங்கியது.இதனை தொடர்ந்து நடக்கும் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜையில் கலந்து கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள், பாஜக தலைவர் அண்ணாமலை, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிடோர் பசும்பொன் சென்று முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில் பெருமதிப்புக்குரிய பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவரது குருபூஜை நாளில் வணங்குகிறேன் என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,மதிப்பிற்குரிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெருமகனாரின் புனித குருபூஜையை முன்னிட்டு அவருக்கு நமது அஞ்சலியை செலுத்துகிறோம்.

சமூக மேம்பாட்டில் ஆழமாக வேரூன்றி இருந்த அவரது அரும் பணிகள், விவசாயிகளின் செழிப்பு, வறுமை ஒழிப்பு மற்றும் ஒற்றுமையை வலியுறுத்திய அவரது ஆன்மீகப் பாதை, தேசத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஒளியேற்றுகிறது. காலத்தால் அழியாத அவரது கொள்கைகள் எதிர்கால தலைமுறையினருக்கான உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாக திகழும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Total
0
Shares
Related Posts